செவ்வாய், 10 ஜூலை, 2012

பெண்கள் முன்னேற்றம்: வளர்ச்சியா, வீக்கமா?


        கடந்த50 ஆண்டுகளில் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத தினுசில் பழக்க-வழக்கங்களிலும் சிந்தனைகளிலும் , முக்கியமாய் பெண்கள் நிலையில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன. இந்த மாற்றங்கள் வளர்ச்சியா, வீக்கமா? உறுதியாய் பெருமளவில் வளர்ச்சி தான்..... ஆனால், ஆங்காங்கே வீக்கங்களும் தோன்றியுள்ளதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.


        அறியாப்பருவத்தில் திருமணம் நடந்து, கல்வியறிவு மறுக்கப்பட்டு 'உனக்கென்று தனியாய் எந்த விருப்பு , வெறுப்பும் இல்லாமல் வாழப்பழகு' என்று காலங்காலமாய் விதிக்கப்பட்டிருந்த சட்டங்களை உடைத்துக்கொண்டு பெண்கள் சமுதாயம் இன்று முன்னேறியுள்ளது. மிகப்பெரிய அளவில்    கல்வித்தகுதியைப் பெற்றதுமில்லாமல் , 'ஆண்களின் உலகம் ' என்று முத்திரை குத்தப்பட்ட பிரிவுகளான ராணுவம், காவல்துறை, அரசியல், தொழில்நுட்பம்- என்று சகலத்திலும் புகுந்து இன்றையப் பெண் வெற்றிக்கொடி நாட்டி வருகிறாள். அடித்தட்டுப் பெண்களும், லாரி, ஆட்டோ ஓட்டுவதிலிருந்து, பி.பீ.ஓ' வில் இரவுவேலை பார்ப்பது, என்று மிக அற்புதமாய் தங்கள் செயல்பாடுகளை  விரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரத் தன்னிறைவு பெற்றதில், பெண்களிடையே பரவலாகத் தன்னம்பிக்கை , சுயமரியாதை  உணர்வுகள் அதிகரித்திருப்பதை  கண்கூடாகக் காணமுடிகிறது.

                ஆனால். இந்த விழிப்புணர்வே சில பெண்களிடம் எல்லை மீறி , வளர்ச்சிக்கப் பதில் வீக்கத்தைத் தந்திருப்பதும் கவலையைத் தருகிறது.' நான் சம்பாதிக்கிறேன்,என் வாழ்க்கையை என்னால் பார்த்துக்கொள்ள முடியும்.ஆக , யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை' என்று சில பெண்கள் , பெற்றோரையும் கணவனையும் குடும்பத்தையும் தூக்கியெறிவதை காண்கையில் , கவலை அதிகமாகிறது.' புல்லானாலும் புருசன்' என்று கண்மூடித்தனமாய் அடிமைப்பட்டிருப்பது தேவையே இல்லை. என்றாலும், விட்டுக்கொடுப்பதும் , அனுசரித்துச் செல்வதும் , நாளைக்குக் கண்டிப்பாய் விடியுமென்ற நம்பிக்கையுடன் வாழ்வதும் , வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் என்பதை  மறந்துவிட்டால் எப்படி!!!!!!!!!!

சனி, 29 அக்டோபர், 2011

எங்கே போனது எங்கள் தமிழ்

விரைந்து போகின்றது காலம் அதில்
மறைந்து போகின்றது தமிழ் !

அறிவித்த ஆசிரியர்களும்
தெரிவித்த  அறிஞர் பெருமான்களும் 
தேடியே சேர்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை 
அயல்மொழி கல்வியில்....!
வீதியில் விளம்பரமும் 
வீடேரும் கடிதங்களும் 
ஏந்தியே திரிகின்றன அம்மொழியை...!

தேனீரும் குழம்பியும் குடித்தால் திகட்டலாம் 
தமிழில் படித்தால் திகட்டுமோ?

அம்மாவென்றும்,அப்பாவேன்றும் 
தாய்மொழியில் அழைப்பதில் தரிப்பதில் இன்பம் 
அந்நிய மொழியில் தரித்திடுமோ?

இரண்டாயிரம் வருடம் 
முதிர்ந்தவள் என்றாலும் 
முலைப்பால் கொடுத்தவள் அல்லவோ?

கூனிக்குறுகி நடக்கிறாள் அவள் 
குடிசை கொடவிடினும் 
குச்சியாவது கொடுங்கள்!

உங்கள் சந்ததிக்கு 
அயல்மொழிக்கு  அர்த்தம் தேடும் 
அகராதிகளை அழித்துவிட்டு 
தாய்மொழிக்கு அர்த்தம் தேடும் 
அகராதிகளை அளித்துவிடாதிர்கள்....!

உயிருக்கு மொழிக்கொடுத்த தமிழ் தாயவளை 
இறக்கவிடதிர்கள் தோழர்களே உங்களை 

இரஞ்சியே  கேட்கிறோம்...........!!!!?

                                                                   எழுத்து.காம்


வெள்ளி, 28 அக்டோபர், 2011

தவிராமல் தமிழ்நலம் காக்க !

தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல்  
தமிழ் மானம் தமிழர்நலம்  கருதுவோர்கள் 
இனியேனும் தமிழ்நிலத்தில் 
எழுந்திடுக! பொதுத்தொண்டில்
இறங்கிடுக!எந்தமிழர்க் கேற்றம் காண்க!
பணியேனும் குளிரேனும் மழையேனும் வெயிலேனும் 
பாராமல் தெருத்தெருவாய் ஊருராகத் 
தனியேனும் இணைந்தேனும் தந்தம்மால் முடிந்தவரை 
தமிழினத்திற் குளமுவந்தே உழைத்தல் செய்க! 

புலையறைவாய் விளம்பரத்தால் 
பொதுத்தொண்டர் போல் நடித்துப் 
பொருள்தொகுக்கும் புல்லியரும் மலிந்துபோனார்!
தலைமறைவாய் தமிழ்நிலத்தைப் 
பகைவரிடம் விலைபோக்கும்
தன்நலத்தார் தமிழ்நாட்டில் தலைமையேற்றார்!
இலைமறைவாய்க் காய்மறைவாய்
உண்மைத்தொண் டாற்றுபவரும்
இந்நிலத்தில் இல்லாமல் இல்லை; இந்தத்
தலைமுறையில் அவரெழுந்து தவிராமல் சலியாமல்
தமிழ்நலத்தை காத்தால்தான் தப்புவோமே!

                                           -பாவலரேறு (௧௯௭௮)

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

இதிகாசங்களின் இழிவுத்தன்மை - பாகம் இரண்டு (இராமாயணம் )

          காதல் என்றால் என்ன என்பதை காட்ட கூடிய இலக்கியம் ராமாயணம்  என்று கூறுவார்கள். சீதையும் ராமனும் கொண்டிருந்தது உண்மையான காதல் என்றால் ஊரார்  சந்தேகப்படுகிறார்கள் என்பதற்காக ஊரைவிட்டு காட்டிற்கு அனுப்பியது ஏன்? தன்னை நம்பி வந்தவளுக்கு துரோகம் செய்வது தான் உண்மையான காதலா? 
      
         இராமாயணத்தில் நடக்கும் போர் முறையை கவனித்தால் ராமன் வீரத்தோடு போரிட்டு வெற்றி பெறவில்லை. தலையை கொண்டு போய் கடலில் போடுகிறது ராமபாணம், இறந்தவரை எழுப்புகின்ற சஞ்சீவி மலை என்று நம்பமுடியாத காரியங்களை கூறுகிறது.

          தன்னை வளர்த்த ராவணனை விட்டுவிட்டு பதவி ஆசையால் ராமனின் பக்கம் நின்று தன் சகோதரனையே காட்டி கொடுத்த வீபிஷ்ணனை புகழ்கிறது ராமாயணம்.  ராமா! ராமா! என்று பூசிக்கிரோமே அவன் செய்த காரியம் என்ன தெரியுமா?

          ராமன் ஆட்சியில், ஒருநாள் ஒரு பிராமணன் இறந்து போன தன் பிள்ளையினுடைய உடலை சுமந்து கொண்டு, ராமனிடம் வந்தான். பலவிதமான வசை மொழிகளை கூறுகிறான். பின்னர், அவன் ஒரு சூத்திரன்  காட்டில் தவம் பண்னுகின்றான். அவனை கொல்லாமல் இருந்த காரணத்தினால் என் குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது, என்று கூறினான். அந்த சூத்திரனை கொன்றால் தன் குழந்தையின் உயிர் திரும்ப வரும்  என்று அசிரீரி கூறியதாகவும் சொன்னான்.  உடனே, ராமன் மகிழ்ச்சி அடைந்து சூத்திரனை கொள்ள காட்டிற்கு சென்றான். ஒரு துறவி என்று கூட நினையாமல் சூத்திரனை கொன்றான். கொல்வதற்கு முன் அவன் கூறிய வார்த்தைகள் ராமாயணத்தின் மொழிப்பெயர்ப்பு நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளது. 
                    "ஹே! ஹஸ்த தசஷின மருத்ஸ் பசி சொர்தவி சச்ய 
                     ஜீவதலே வெஸ்ருஜா சூத்திர முஜலக்று பாணம்
                     ராமஸ்ய கத்ரமஷி .............." 
           பொருள்: ஓ! வலது கையே இறந்து போன பிராமண சிறுவன் மறுபடியும் உயிர் பெற்று எழுவதற்கு இந்த சூத்திர துறவியை கொல்லுவதே மருந்தாகையால் கூசாமல் இவனை வெட்டிவிடு, என்கிறான் ராமன். 

           அந்த துறவியை கொன்றதும் சிறுவன் உயிர் பெற்று எழுந்ததாக கூறுகிறது, ராமாயணம்.      (மூலம் : ஞான சூரியன்) 
                   இப்படிப்பட்ட அயோக்ய ராமன்தான் உத்தமனாம், கடவுளாம்!  இதிலிருந்து அறியலாம் பிரமணர்களை கடவுளாக வணங்க வேண்டுமென அவர்கள் சித்தரித்த நூலே ராமாயணம் என்பது விளங்கும்.    '' ராமன் '' இவனை கடவுளாக வணங்கினால் நம் தமிழ் இனத்திற்கே அவமானம். ஆயிரகணக்கான ஆண்டுகளாக தமிழ் இனத்திற்கு அவமானத்தை விளைவித்து கொண்டிருகிறோம். 
சிந்தித்து பாருங்கள் என் தமிழ் தோழமைகளே !!!

சனி, 30 ஜூலை, 2011

இதிகாசங்களின் இழிவுத்தன்மை - பாகம் ஒன்று

          இராமாயணம்,  மகாபாரதம்  இரண்டையும் இதிகாசங்கள்  என்பர். ஆனால்,இந்த உலகிலேயே இப்படியொரு கேவலமான  நூல்கள்  இல்லை. தமிழ் சமுதாயத்தை இழிவுபடுத்தும் நூல்கள். இவற்றையே நாம் இந்து மதத்தின் புனித நூல்களாக தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். இவற்றின் இழிவுதன்மைகளை கூற பல புத்தகங்களை எழுதினாலும் போதாது.

மகாபாரதம் 
           ஒருவனுக்கு ஒருத்தி என்பதே தமிழ் மரபு. இந்து மதமும் இதைத்தான் கூறுகிறது. ஆனால்,இந்து மதத்தின் புனித நூலாகிய மகாபாரதத்தில் பாஞ்சாலி ஐந்து பாண்டவர்களுக்கு மனைவி. இவள் கற்புக்கரசியாம்? தருமன் சூதாட்டத்தில் வல்லவன். அருச்சுனன் நயவஞ்சகன். இவர்கள்  மட்டுமல்ல அனைவருமே அயோக்கியர்கள். கீதை இந்துகளின் புனித நூல்.இதை கண்ணன் எழுதினான் என்று கூறபடுகிறது. ஆனால், வியாசர் எழுதிய பின் இடையில் சொருகின இடைசொருகளே கீதை. அந்த நூலினை படித்தால் திராவிடர்களை இழிவுப்படுத்தி எழுதி உள்ளதை காணலாம். இப்படி நம் மக்களை இழிவுப்படுதுகிற மகாபாரதத்தினை நாம் புனித நூலாக கருதலாமா? இந்து மதம் பிராமணர்கள் கொண்டு வந்தது. அவர்களை பெருமைப்படுத்த எழுதிய நூல்.


              எடுத்துகாட்டாக, கீதையில் அருச்சுனன் போரிடுவதற்கு தயங்கியதற்கான காரணத்தை கண்ணன் கேட்டபோது அருச்சுனன் அளித்த பதில், அருச்சுனன் எதிரில் நிற்பவர்களை கண்டான். அவன் ஆசிரியர்களும் நண்பர்களுமே நின்றார்கள். என் இன ஆண்  மக்களை நான் அழித்தால் என் இன பெண்கள் ஆண்கள் எண்ணிக்கை குறைவினால் வேறு இன ஆண்களை மணந்து கொள்வார்கள், இதனால் குல நாசம் ஏற்படும், என் குலம் அழிந்து விடும் என்று கருதினான். 

             இதிலிருந்து அவனின் இனவெறியை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பிரமணர்களுக்கு இருக்கும் இனவெறி நமக்கு ஏன் இல்லை?  இவ்வாறு கேட்பது முட்டாள்தனம். ஏனென்றால் இங்கு வாழும் அனைவரும் உண்மையான தமிழர்கள் அல்லர். இனகலப்பு ஏற்பட்டு விட்டது. எங்கெங்கிருந்தோ வந்தவர்கள் இங்கு குடியமர்ந்து விட்டார்கள். இந்த இதிகாசங்களை கூர்ந்து கவனித்தால் அவற்றின் உட்கருத்துக்கள் புரியும். அவர்களின் இழிவான கலாச்சாரம் புரியும்.

தொடரும்...