சனி, 29 அக்டோபர், 2011

எங்கே போனது எங்கள் தமிழ்

விரைந்து போகின்றது காலம் அதில்
மறைந்து போகின்றது தமிழ் !

அறிவித்த ஆசிரியர்களும்
தெரிவித்த  அறிஞர் பெருமான்களும் 
தேடியே சேர்கிறார்கள் தங்கள் பிள்ளைகளை 
அயல்மொழி கல்வியில்....!
வீதியில் விளம்பரமும் 
வீடேரும் கடிதங்களும் 
ஏந்தியே திரிகின்றன அம்மொழியை...!

தேனீரும் குழம்பியும் குடித்தால் திகட்டலாம் 
தமிழில் படித்தால் திகட்டுமோ?

அம்மாவென்றும்,அப்பாவேன்றும் 
தாய்மொழியில் அழைப்பதில் தரிப்பதில் இன்பம் 
அந்நிய மொழியில் தரித்திடுமோ?

இரண்டாயிரம் வருடம் 
முதிர்ந்தவள் என்றாலும் 
முலைப்பால் கொடுத்தவள் அல்லவோ?

கூனிக்குறுகி நடக்கிறாள் அவள் 
குடிசை கொடவிடினும் 
குச்சியாவது கொடுங்கள்!

உங்கள் சந்ததிக்கு 
அயல்மொழிக்கு  அர்த்தம் தேடும் 
அகராதிகளை அழித்துவிட்டு 
தாய்மொழிக்கு அர்த்தம் தேடும் 
அகராதிகளை அளித்துவிடாதிர்கள்....!

உயிருக்கு மொழிக்கொடுத்த தமிழ் தாயவளை 
இறக்கவிடதிர்கள் தோழர்களே உங்களை 

இரஞ்சியே  கேட்கிறோம்...........!!!!?

                                                                   எழுத்து.காம்


வெள்ளி, 28 அக்டோபர், 2011

தவிராமல் தமிழ்நலம் காக்க !

தனிமானம் கருதாமல் தனிநலத்தை விரும்பாமல்  
தமிழ் மானம் தமிழர்நலம்  கருதுவோர்கள் 
இனியேனும் தமிழ்நிலத்தில் 
எழுந்திடுக! பொதுத்தொண்டில்
இறங்கிடுக!எந்தமிழர்க் கேற்றம் காண்க!
பணியேனும் குளிரேனும் மழையேனும் வெயிலேனும் 
பாராமல் தெருத்தெருவாய் ஊருராகத் 
தனியேனும் இணைந்தேனும் தந்தம்மால் முடிந்தவரை 
தமிழினத்திற் குளமுவந்தே உழைத்தல் செய்க! 

புலையறைவாய் விளம்பரத்தால் 
பொதுத்தொண்டர் போல் நடித்துப் 
பொருள்தொகுக்கும் புல்லியரும் மலிந்துபோனார்!
தலைமறைவாய் தமிழ்நிலத்தைப் 
பகைவரிடம் விலைபோக்கும்
தன்நலத்தார் தமிழ்நாட்டில் தலைமையேற்றார்!
இலைமறைவாய்க் காய்மறைவாய்
உண்மைத்தொண் டாற்றுபவரும்
இந்நிலத்தில் இல்லாமல் இல்லை; இந்தத்
தலைமுறையில் அவரெழுந்து தவிராமல் சலியாமல்
தமிழ்நலத்தை காத்தால்தான் தப்புவோமே!

                                           -பாவலரேறு (௧௯௭௮)