செவ்வாய், 10 ஜூலை, 2012

பெண்கள் முன்னேற்றம்: வளர்ச்சியா, வீக்கமா?


        கடந்த50 ஆண்டுகளில் கற்பனை பண்ணிப்பார்க்க முடியாத தினுசில் பழக்க-வழக்கங்களிலும் சிந்தனைகளிலும் , முக்கியமாய் பெண்கள் நிலையில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன. இந்த மாற்றங்கள் வளர்ச்சியா, வீக்கமா? உறுதியாய் பெருமளவில் வளர்ச்சி தான்..... ஆனால், ஆங்காங்கே வீக்கங்களும் தோன்றியுள்ளதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.


        அறியாப்பருவத்தில் திருமணம் நடந்து, கல்வியறிவு மறுக்கப்பட்டு 'உனக்கென்று தனியாய் எந்த விருப்பு , வெறுப்பும் இல்லாமல் வாழப்பழகு' என்று காலங்காலமாய் விதிக்கப்பட்டிருந்த சட்டங்களை உடைத்துக்கொண்டு பெண்கள் சமுதாயம் இன்று முன்னேறியுள்ளது. மிகப்பெரிய அளவில்    கல்வித்தகுதியைப் பெற்றதுமில்லாமல் , 'ஆண்களின் உலகம் ' என்று முத்திரை குத்தப்பட்ட பிரிவுகளான ராணுவம், காவல்துறை, அரசியல், தொழில்நுட்பம்- என்று சகலத்திலும் புகுந்து இன்றையப் பெண் வெற்றிக்கொடி நாட்டி வருகிறாள். அடித்தட்டுப் பெண்களும், லாரி, ஆட்டோ ஓட்டுவதிலிருந்து, பி.பீ.ஓ' வில் இரவுவேலை பார்ப்பது, என்று மிக அற்புதமாய் தங்கள் செயல்பாடுகளை  விரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். கல்வி, பொருளாதாரத் தன்னிறைவு பெற்றதில், பெண்களிடையே பரவலாகத் தன்னம்பிக்கை , சுயமரியாதை  உணர்வுகள் அதிகரித்திருப்பதை  கண்கூடாகக் காணமுடிகிறது.

                ஆனால். இந்த விழிப்புணர்வே சில பெண்களிடம் எல்லை மீறி , வளர்ச்சிக்கப் பதில் வீக்கத்தைத் தந்திருப்பதும் கவலையைத் தருகிறது.' நான் சம்பாதிக்கிறேன்,என் வாழ்க்கையை என்னால் பார்த்துக்கொள்ள முடியும்.ஆக , யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை' என்று சில பெண்கள் , பெற்றோரையும் கணவனையும் குடும்பத்தையும் தூக்கியெறிவதை காண்கையில் , கவலை அதிகமாகிறது.' புல்லானாலும் புருசன்' என்று கண்மூடித்தனமாய் அடிமைப்பட்டிருப்பது தேவையே இல்லை. என்றாலும், விட்டுக்கொடுப்பதும் , அனுசரித்துச் செல்வதும் , நாளைக்குக் கண்டிப்பாய் விடியுமென்ற நம்பிக்கையுடன் வாழ்வதும் , வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்கும் என்பதை  மறந்துவிட்டால் எப்படி!!!!!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக